Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த சீரியலை விட்டு நான் விலகுகிறேன்…. பிரபல நடிகையின் இன்ஸ்டா பதிவால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்…!!

பிரபல நடிகை சீரியலை விட்டு விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக இருந்தவர் நடிகை நவ்யா சுவாமி. அதன்பிறகு தமிழில் நடிகை ராதிகா நடித்த வாணி ராணி சீரியலிலும் நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதன் பிறகு இவர் பல சீரியல்களில்  பிஸியாக நடித்து வந்தார். ஆனால் கடந்த ஜூலை மாதம் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்தார்.

அதன்பின் தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் ஆமேகதா என்ற சீரியலில் நடித்து வந்தார். இந்நிலையில் இவர் தற்போது அந்த சீரியலில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் மற்றொரு புதிய சீரியல் மூலம் தங்களைச் சந்திக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் திடீரென இந்த சீரியலை விட்டு விலகியது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |