ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரை தான் திருமணம் செய்வேன் என ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை ராஷி கண்ணா இமைக்காநொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, சங்கத்தமிழன், அடங்கமறு, துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய ராஷி கண்ணா, ”எனக்கு காதலர் யாரும் கிடையாது, அப்படி யாராவது இருந்தால் சொல்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும், என்னுடைய கணவர் அழகாக இருப்பதை விட ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் நம்பிக்கை இருப்பவரை தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று கூறியுள்ளார். அவர் தமிழில் விஜய் மற்றும் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு ஆகியோரை பிடிக்கும்என்றும் கதாநாயகிகளில் சமந்தா, அனுஷ்கா, நயன்தாரா ஆகியோரை மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.