புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஜான்குமார் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
புதுச்சேரியில் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 21_ஆம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரை விட 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே வெற்றிபெற்ற வேட்பாளர் ஜான்குமார் செய்தியாளர்களிடம் வெற்றி குறித்து பகிர்ந்து கொண்டார்.அப்போது அவர் பேசுகையில் , காமராஜ் தொகுதி மக்கள் வாக்கு சதவீதததால் ”என்னை வச்சு செஞ்சுட்டாங்க” உங்களுக்கு நன்றி தெரிவித்த்துக் கொள்கிறேன். எப்போதும் நான் உங்களை மறக்க மாட்டேன். எல்லா அடிப்படை தேவைகளையும் , நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை அனைத்தையும் செய்து நிச்சயமாக செய்து கொடுப்பேன் என்று தெரிவித்தார்.
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு , மகிழ்ச்சியா இருக்கு தோல்வி அடைந்ததும் என்னுடைய நண்பர் தான். தோல்வியடைந்த என் நண்பருக்கு வாழ்த்துக்கள். முன்னாள் முதல்வர் N. ரங்கசாமி அவர்களுக்கும் வாழ்த்துகள். அவுங்க ரொம்ப வேலை செஞ்சாங்க. இருந்தாலும் மக்கள் தீர்ப்பு வேற மாதிரி இருந்ததுள்ளது. எனவே அவர்கள் கவலைப்படக்கூடாது என்று தெரிவித்தார் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப் பட்டவுடன் அந்த கட்சியினர் அவரை தோளில் சுமந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.