பிரபல நடிகை சார்மி தான் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘காதல் அழிவதில்லை’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சார்மி. இவர் தமழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். புது படத்தில் நடிக்க வாய்ப்பில்லாமல் இருக்கும் சார்மி தற்போது தயாரிப்பில் களமிறங்கியுள்ளார்.
அதன்படி முன்னணி நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிக்கும் ‘லிகர்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகை சார்மி திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. இதனை அறிந்த சார்மி தனது திருமணம் குறித்து கூறியதாவது, தற்போது சிறந்த வேலையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
ஆகையால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தவறான முடிவை என் வாழ்க்கையில் எப்போதும் எடுக்க மாட்டேன். வதந்திகளை எழுதுபவர்களுக்கு குட் பாய். சுவாரஸ்யமான கதைகளை உருவாக்குவதில் நீங்கள் மிகவும் சிறந்தவர்கள் என்று கூறி தன்னைப் பற்றி எழுதியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.