Categories
இந்திய சினிமா சினிமா

“பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொகுத்து வழங்க மாட்டேன்”…. பிரபல டாப் ஹீரோவின் அதிரடி முடிவால் ரசிகர்கள் ஷாக்….!!!

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தமிழில் தற்போது பிக் பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்க, ஹிந்தியில் 16-வது சீசனும், தெலுங்கில் 6-வது சீசனும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதன்பிறகு 3 மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்க, 2-ம் சீசனை நடிகர் நானியும், 3,4,5,6 ஆகிய சீசன்களை நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கினர்.

இந்த சூழ்நிலையில் நடிகர் நாகார்ஜுனா 6-ம் சீசனோடு பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்குவதில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இது தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகர் நாகார்ஜுனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவை 7-ம் சீசனில் களம் இறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |