Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா இருக்க மாட்டேன்… ட்விட்டுக்கு லைக் போட்டு…. டக்குனு ரிப்ளை செஞ்ச அண்ணாமலை… மன சோர்வில் காயத்ரி ரகுராம்…!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், செல்வகுமார் என்ற ஒரு நபர். கிட்டத்தட்ட மூணு மாசத்துக்கு முன்னாடி வந்து சேர்ந்த ஒருத்தர். வந்த உடனே ஒரு பெரிய பொறுப்பு வாங்கி,  இன்னைக்கு அவர் எனக்கு எதிராக கொச்சையான ட்விட்டருக்கு லைக் போட்டுட்டு இருக்கும்போது,  அதை பார்த்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்.

கட்சியில் எனக்கு விளக்கம் கொடுக்க டைம் கொடுக்கல. டைம்  கொடுக்குறதுக்கு முன்னாடியே என்னை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. அந்த மனநிலையில் இருந்து நான் வெளியே வரவேண்டும். கட்சியில் போய் பேசுறதுக்கு எனக்கு டைம் கொடுக்கணும். நான் எனது விளக்கத்தை கொடுக்க தயாராகிக்கொண்டு இருந்தேன். அதற்கும், விசாரணை வைக்காமல், நோட்டீஸ் எதுவும் இல்லாமல் என்னை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க.

அண்ணாமலை எப்போதும் ரொம்ப பிசியா இருப்பாரு. ஏதும் சொல்லி வாட்ஸ் அப்ல சொன்ன டக்குனு வந்து ரிப்ளை பண்ணுவாரு. ஒரு விஷயம் சொல்றதுக்கு முன்னாடி, தயார் பண்ணனும். ஏன்னா என்ன நடந்ததுன்னு சொல்லணும் ? இது வந்து சும்மா உக்காந்துட்டு நம்ம whatsapp ல சேட் பண்ற மாதிரி இல்ல. என்ன நடந்தது என விளக்கமா கொடுக்கணும்.

ஏன்னா  ஃபர்ஸ்ட் டைம் அந்த செல்வகுமார் இப்படி பண்ணல. இதுக்கு முன்னாடி ஏற்கனவே பண்ணனுன விவரத்தில் இருந்து, நான் எடுத்துட்டு போனும். அதை எல்லாம் தயார் செய்து முடிப்பதற்குள் என்னை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க என தெரிவித்தார்.

Categories

Tech |