Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நான் இருக்கமாட்டேன்… “ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு”… மரத்தில் சடலமாக தொங்கிய ஆசிரியை… சோக சம்பவம்..!!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டு விட்டு அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் காரைக்குடியை சேர்ந்த தம்பதியினர் காண்டீபன் புவனேஸ்வரி. காண்டீபன் தீயணைப்புத் துறையில் பணிபுரிந்து வரும் நிலையில் புவனேஸ்வரி அரசு பள்ளியில் ஆசிரியராகவும் சொந்தமாக நடனப்பள்ளி நடத்துபவராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புவனேஸ்வரி இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் எனது நன்றி.இனிமேலும் இனி நான் இருக்க போவதில்லை என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து சந்தேகம் கொண்ட புவனேஸ்வரியின் மாணவி அவரது கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

காண்டீபன் மனைவியை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் புவனேஸ்வரிடம் பேச முடியாததால் விரைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் புவனேஸ்வரியின் தொலைபேசி எண் மூலம் தேடியதில் திருச்சி பைபாஸ் அருகே இருந்த காட்டுப் பகுதியில் செல்போன் டவர் காட்டியுள்ளது. அங்கு காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் மரமொன்றில் புவனேஸ்வரி சடலமாக தொங்கியுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |