Categories
சினிமா தமிழ் சினிமா

இதெல்லாம் தப்பு…. சினிமாவுக்காக கூட செய்யமாட்டேன்…. இயக்குனரிடம் கறாராக கூறிய அஜித்….!!

சினிமாவிற்காக விதிமுறைகளை  மாட்டேன் என அஜித் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர்  வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இதனையடுத்து, வலிமை படத்தினை வருகிற பொங்கல் அன்று வெளியிட இருப்பதாக படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில், இந்த படத்தில் பைக் ஸ்டண்டுகள் நிறைய உள்ளன என ஒரு சிறிய அப்டேட்டை கொடுத்தார்.

valimai-cinemapettai

மேலும், ஒரு பைக் சேசிங் காட்சியில் அஜித்திடம் இந்த காட்சியில் நீங்கள் தான் பைக் ஒட்டுகிறீர்கள் என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். எனவே, நீங்கள் ஹெல்மெட்டை கழட்டிவிட்டு பைக் ஓட்டுங்கள் என்று கூறினேன். ஆனால், அதற்கு அஜித் ஹெல்மெட் போட்டுக் கொண்டுதான் பைக் ஓட்டவேண்டும் என்றும் சினிமாவிற்காக மாற்றக்கூடாது என மறுத்து விட்டதாக கூறினார்.

மேலும், மற்றொரு சீனில் ஹாரன் அடித்து கொண்டு கார் ஓட்டுவது போல் எடுக்கணும்னு சொன்னபோது அதையும் மறுத்து விட்டார். ஹாரன் அடித்து கொண்டு கார் ஓட்டினால் குழந்தைகள் பெரியவர்கள் பயப்படுவார்கள் என்றும் இந்த மாதிரி சினிமாவிற்காக மாற்றிக் கொள்ளக்கூடாது என்று சொன்னதாகவும் இயக்குனர் வினோத் கூறினார்.

Categories

Tech |