செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியை பொறுத்த வரைக்கும் எந்த பதவியும் வெங்காய பதவி கிடையாது, பணம் சம்பாதிப்பதற்கு, நம்முடைய பெருமையை பீற்றிக் கொள்வதற்கு பாரதிய ஜனதா கட்சியில் எந்த பதவியும் இல்லை. ஒரு காரிய கார்த்தனுக்கு என்ன மரியாதை இருக்கிறதோ, அதே மரியாதையை தான் மாநிலத் தலைவருக்கும் இருக்கிறது.
நீங்கள் பார்த்தீர்கள் என்றாலே தெரியும், காலில் விழுவது, கை கட்டிட்டு குனிந்து கொண்டு 90 டிகிரில நிற்பது, ஸ்டாலின் அவர்கள் அங்கே நடந்து வரும்போது, இங்கு அப்படியே காலை பார்த்துக் கொண்டு நிற்பது, அதெல்லாம் பாரதிய ஜனதா கட்சியில் இல்லை. அதனால் இது ஒரு வெங்காய பதவி தான் என்னை பொருத்தவரை, இந்த பதவியை வைத்து பெருசா சம்பாதிப்பதற்கு, ஒரு பெருமையை தேடிக்கொள்வதற்கு அண்ணாமலை இங்கே வரவில்லை.
அதனால் எதிர்க்கட்சி நண்பர்களுடைய நான் ஓன்று சொல்லிக் கொள்கிறேன், இன்றைக்கு இல்லை என்றால் நாளைக்கு இந்த பதவியை விட்டு நான் போய் தான் ஆக வேண்டும். இது நிரந்தரமான சீட்டு, நிரந்தர பொதுச் செயலாளர், நிரந்தர மு க ஸ்டாலின் அவர்கள் தான் தமிழகத்தில் கட்சித் தலைவர், அதெல்லாம் நம்ம கட்சியில் இல்லை.
இந்த கட்சியினுடைய அற்புதமே அடுத்து இங்கே யாரும் நிற்கிறவர்கள், எங்கே இருக்கிற ஒரு இடத்தில் கடினமாக வேலை செய்யக்கூடிய காரிய கர்த்தா தலைவராக வருவார், அதுதான் இந்த கட்சியினுடைய உயிர்ப்பு. அதனால்தான் நானே இந்த கட்சியில் வந்தேன், இதில் நிரந்தரமாக நான் தான் தலைவர் என்று சொல்லி இருப்பவர்கள் இருந்தால் நானே இந்த கட்சிப் பக்கமே நான் போயிருக்க மாட்டேன் என தெரிவித்தார்.