தேனி மாவட்டத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள டி.கள்ளிப்பட்டியில் முனியாண்டி மற்றும் அவரது மனைவி நித்யா(30) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நித்யா சிவாஜி நகரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வேலை பார்த்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து நித்யாவிற்கு அந்த வேலை பிடிக்காததால் வேலையிலிருந்து நிற்பதாக கடை உரிமையாளர்களிடம் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அழகு நிலையத்தின் உரிமையாளர்களான ராஜாமுகமது மற்றும் பிரதீபா அதற்கு மறுத்துள்ளனர். மேலும் நித்யாவை தாக்கி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நித்யா உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் பிரதீபா, ராஜாமுகமது ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.