பாலிவுட் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் தற்போது நடித்து வருகிறார். சன்னி லியோனின் கவர்ச்சி நடனத்திற்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் சக நடிகைகள் தங்களுடைய படங்களில் சன்னி லியோனை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு குரல் தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் நடிகை சன்னி லியோனுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாகவே இருக்கிறது. இந்நிலையில் நடிகை சன்னி லியோன் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, நான் படங்களில் குத்துப் பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடி வருகிறேன். ஆனால் நான் கவர்ச்சி நடனம் ஆடும் போது படப்பிடிப்பு தளத்தில் குழந்தைகள் இருக்கக் கூடாது. வயது வந்தவர்கள் படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொள்ளலாம். ஆனால் சிறு குழந்தைகள் எங்காவது இருந்தால் நானே உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி விடுவேன். படப்பிடிப்பு தளத்தில் குழந்தைகள் இருக்கக் கூடாது என்று நான் பட குழுவுக்கு கண்டிஷன் போட்டுள்ளேன். மேலும் எனக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கிறது என்று கூறியுள்ளார்.