Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரியார் பேசியதை பேசாமல்,  நீ பேசியதையா நான் பேசுவேன் – ஆ.ராசா அதிரடி

ஹிந்து மதத்துக்கு எதிராக திமுகவின் ஆ.ராசா சர்சைக்குரிய வகையில் பேசினார் என்ற பரபரப்பு எதிராக விளக்கம் அளித்த அவர், அரசியல் சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஒரு ஆளுநர் அரசியல் சட்டத்தை தூக்கி காலிலே மிதித்து விட்டு, சனாதான தர்மம் தான் வேண்டுமென்று சொல்லுகின்ற போது,  அந்த சனாதான தர்மம் எதன் மீது கட்டப்பட்டிருக்கிறது என்றால், மனுஸ்மிருதி மேல் கட்டப்பட்டு இருக்கின்றது.

அந்த மனுஸ்மிருதில ”என்ன பெயர்” என பெரியார் இறக்கும் இரண்டு நாட்களுக்கு முன் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இது பெரியார் மண் என எங்கள் முதலமைச்சர் சொல்கிறார். இது பெரியார் மண். அவர் பேசியதை பேசாமல்,  நீ பேசியதையா நான் பேசுவேன். இதற்குத்தான் இந்த கடிதம் இன்று ( பெரியார் பேசிய வார்த்தைகள் ) பயன்படுத்தியிருக்கிறது. எனவே உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் இந்துக்களுக்கு எதிரியல்ல, இந்து மதத்தின் பெயரால் சொல்லப்படுகின்ற சனாதன தத்துவத்திற்கு தான் எதிரிகள். அந்த சனாதனத்தை வீழ்த்தாத வரை, அரசியல் சட்டம் வாழாது. அரசியல் சட்டம் வாழ விட்டால்,  இந்தியா ஒரு நாடாக இருக்காது. எனவே எல்லோரும் சேர்ந்து சனாதனத்தை ஒழிப்போம், அதற்காக நமது முதலமைச்சரின் கரங்களை வலுப்படுத்துவோம் என தெரிவித்தார்.

Categories

Tech |