ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சாலை பாதுகாப்பு கிரிக்கெட் உலக தொடர் 2020ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களான சச்சின், சேவாக், பிரட் லீ, ஜான்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் களமிறங்கவுள்ளனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த தொடரின் முதல் சீசன் 2020, 2021 என இரண்டு பகுதிகளாக நடந்தது.
முதல் சீசன்:
முதல் சீசனில் இந்தியன் லெஜண்ட்ஸ், வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ், இலங்கை லெஜண்ட்ஸ், தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ், ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ், இங்கிலாந்து லெஜண்ட்ஸ் , பங்களாதேஷ் லெஜண்ட்ஸ் அணிகள் என 7 அணிகள் பங்கேற்ற நிலையில், இந்தியா – இலங்கை இறுதி போட்டி சென்று இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
2ஆவது சீசன்:
செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கிய 2ஆவது சீசனில் புதிதாக நியூஸிலாந்து லெஜண்ட்ஸ் அணி பங்கேற்று 8 அணிகளாக களமிறங்கின. தற்போது வரை 12போட்டிகள் நடந்துள்ள நிலையில், 13ஆவது போட்டியாக இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் VS நியூஸிலாந்து லெஜண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ்:
கிர்க் எட்வர்ட்ஸ் ( கேப்டன் ), பிரையன் லாரா, நரசிங் தியோனரின், சுலைமான் பென், டேரன் பவல், டேவ் முகமது, டுவைன் ஸ்மித் ஜெரோம் டெய்லர், டான்சா ஹயாட், வில்லியம் பெர்கின்ஸ், கிரிஷ்மர் சாண்டோகி, தேவேந்திர பிஷூ, நவின் ஸ்டீவர்ட்.
நியூஸிலாந்து லெஜண்ட்ஸ்:
கிரேக் மக்மில்லன், ஸ்காட் ஸ்டைரிஸ், ஜேம்ஸ் பிராங்க்ளின், கரேத் ஹாப்கின்ஸ், ஜேக்கப் ஓரம், ஷேன் பாண்ட், கைல் மில்ஸ், ஜேமி எப்படி, புரூஸ் மார்ட்டின், ஆரோன் ரெட்மண்ட், ஜேசன் ஸ்பைஸ், ராஸ் டெய்லர் ( கேப்டன் ), நீல் புரூம், டீன் பிரவுன்லி, அன்டன் டெவ்சிச், ஹமிஷ் பென்னட்.
புள்ளி பட்டியல்: