அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்பேன் என்று கர்நாடக மாநில சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் + மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு கவிழ்ந்து குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பாஜக புதிய அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றது.
இந்நிலையில் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்கவேண்டுமென்று பாஜகவும் , அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் கொறடா உத்தரவை மீறியதால் அவர்களை தகுதி நீக்கம் செய்யவேண்டுமென்று காங்கிரஸ் கட்சியும் அடுத்தடுத்து சபாநாயகர் ரமேஷ்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து சபாநாயகர் ரமேஷ்குமார் கூறுகையில் , கட்சியின் கொறடா உத்தரவை மீறியவர்களை தகுதி நீக்கம் செய்ய காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சிகள் கடிதம் கொடுத்துள்ளன. ஸ்ரீமந்த்பட்டீல் MLA_வுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளேன். அவர் ஆஜராவாரா இல்லையா என்று தெரியாது. ஆனால் விசாரணை முடிவடைந்த பிறகு தகுதி நீக்கம் குறித்து முடிவு எடுத்து சட்டப்படி செயல்படுவேன் என்று அவர் தெரிவித்தார்.