Categories
மாநில செய்திகள்

நான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன் – தமிழக முதல்வர் உறுதி …!!

முதல்வர் பழனிச்சாமி தானும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து தமிழகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி எடுத்து 28 நாட்கள் பிறகு இரண்டாவது டோஸை அவர்கள் செலுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நாம் பாதுகாப்பாக வாழ முடியும். இன்றைய தினம் பிரதமர் மோடி இதனை தொடங்கி வைத்திருக்கிறார்.

பிரதமர் மோடியின் விடா முயற்சியால் இந்த பலனை நாம் பெற்றிருக்கின்றோம். தமிழகத்தை பொருத்தவரை 126 இடங்களில் தடுப்பூசி போடும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 226 இடங்களில் இதற்கான ஒத்திகை நடைபெற்றன. இன்று கொரோனா தடுப்பூசி போடப்படுவது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. அனைவரும் இந்த தடுப்பூசியை நிச்சயமாக போட்டுக்கொள்ள வேண்டும். நானும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்வேன் இரண்டு தடுப்பூசியும் மிகவும் பாதுகாப்பானது” என கூறினார்.

Categories

Tech |