Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் முதலமைச்சர் சொல்லுறேன்…. இதுக்கு மேல என்ன பண்ணனும் ? தனியார் பள்ளிகளுக்கு செக் …..!!

தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் அதிக கட்டணம வசூல் செய்வது குறித்து தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

தமிழக முதல்வர் மேட்டூர் அணையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது, தமிழக அரசின் உத்தரவை மீறி பல்வேறு தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள், கட்டணம் கட்டினால் தான் புத்தகம் கொடுப்போம் என்ற குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில்,

அப்படி எந்த பள்ளி மீதும் புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எதாவது தகவல் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும். எதாவது ஒரு ஆதாரம் இருக்கணும்லா. இந்த பள்ளியில் இவ்வளவு கட்டணம் வசூல் செய்யுறாங்கனு யாராவது ஒருவர் புகார் கொடுத்தால் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியும். தானாக போய் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

அரசு வந்து பத்திரிக்கை வாயிலாக, ஊடகம் வாயிலாக நானே, முதலமைச்சரே தெரிவிக்கிறேன். இன்னும் இதுக்கு மேல என்ன வேணும்னு சொல்லுறீங்க. பாதிக்கப் பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வந்தால் அரசு உரிய நடவடிக்கை அந்த பள்ளி மீது எடுக்கும்.

கொரோனா வைரஸ் சகஜ நிலைக்கு வந்த பிறகு தான் தனி தேர்வர்களுக்கு தேர்வு குறித்து அறிவிக்கப்படும். கொரோனா வைரஸ் தொற்று இருக்கின்ற போது இதை அறிவித்தால் உடனேயே எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்துக்கு போறாங்க. ஏதாவது பிரச்சனை வருது, அதனால தொற்று படிப்படியாக குறைக்கப்பட்டு பிறகு கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் அரசு எடுத்துக் கொண்டு முடிவு செய்யும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன் என முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |