Categories
அரசியல் மாநில செய்திகள்

“தூக்கிப்போட்டு மிதிப்பேன்”…. ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு இடையே அண்ணன்-தம்பி பிரச்சனைதான்… சீறிய செல்லூர் ராஜு….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள பரவை பகுதியில் புதிய குளியலறை, புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிந்தது கட்சி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செல்லூர் ராஜு காவி கொடி இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்க வேண்டும். காவி துணியை சிலைக்கு அணிந்த நபரை பார்த்தால் நாடி தூக்கி போட்டு மிதிப்பேன் என்று கூறினார்.

இதனையடுத்து செய்தியாளர்கள் ஜெயலலிதாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ஓபிஎஸ் அனுமதியுடன் தான் ஜெயலலிதா பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். உண்மையான அதிமுக தொண்டர்கள் என்றைக்கும் விலை போக மாட்டார்கள். நாங்கள் அனைவரும் அதிமுக கட்சியின் உண்மை தொண்டர்கள். அதிமுக கட்சியை சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை. எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கிடையே தற்போது அண்ணன்-தம்பி பிரச்சனை தான் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் பிரச்சினை விரைவில் சரியாகும் என்று கூறினார்.

Categories

Tech |