Categories
உலக செய்திகள்

பந்தயம் கட்டுகிறார்கள்…! ”நான் ஓய மாட்டேன்” டிரம்ப் ஆவேசம் …!!

அமெரிக்க முழுமையாக பொருளாதார வளங்களை மீட்டெடுக்கிற வரை நான்  ஓய மாட்டேன் என டிரம்ப் கூறியுள்ளார்

கொரோனா பாதிப்பு காரணமாக வல்லரசு நாடான அமெரிக்கா கதிகலங்கி நிற்கின்றது. அங்கு 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளார். இதில் இருந்து மீண்டு வருவதற்கு வழி தெரியாமல் அதிபர் டிரம்ப் நிர்வாகம் திணறி வருகின்றது .

இந்தநிலையில் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு டிரம்ப், பேட்டி அளித்தார். அதில் நிருபர் ஒருவர் கொரோனா வைரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில்  அமெரிக்கா பல கோடி டாலர் மதிப்பில் நிதி திட்டங்களை செயல்படுத்தியதால், நாட்டின் கடன் அதிகரித்து இருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு விரிவான பதிலை அளித்துள்ளார் அதிபர் டிரம்ப்.

அப்போது அவர் கூறியதாவது, “அமெரிக்கா கொரோனாவால்  தாக்கப்பட்டுள்ளது. இது ஒரு விதமான தாக்குதல்தான். இது காய்ச்சல் மட்டுமல்ல, இதுபோன்ற ஒரு பாதிப்பை யாரும் பார்த்தது கிடையாது. கடைசியாக 1917 ஆம் ஆண்டு முதல் உலக போரில் தான் இவ்வாறு நடந்ததை பார்த்தோம். வேறு வழி இப்போது நமக்கு இல்லை. நமது பிரச்சினை இதுவே என முதலில் முடிவு செய்ய வேண்டும்.

உலக நாடுகளிலையே நமது நாட்டின் பொருளாதாரம் தான் மிகவும் பெரியது. சீனாவை, உலகின் பிற நாடுகளை காட்டிலும் நமது பொருளாதாரம் தான் மிகவும் பெரியது. நாம் இந்த அளவு  பொருளாதாரத்தை கடந்த மூன்று ஆண்டுகளில் கட்டமைத்தோம். நாம் நமது விமான நிறுவனங்கள்,இன்னும் பல நிறுவனங்களை பாதுகாத்தோம். அவையே சிறந்த நிறுவனமாக 2 மாதங்களுக்கு முன்னர் உருவெடுத்து நின்றது. ஆனால் ஒரே நாளில் அதற்கான சந்தை மூடப்பட்டுவிட்டது .

தற்போது நாடு முழுவதிலும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைய தொடங்கிவிட்டது.இது, கொரோனா தொற்றுக்கு எதிரான நமது நடவடிக்கைகள் சரியானது என்பதை காட்டுகிறது. பல மாகாணங்களும் பாதுகாப்பான முறையில் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க போகின்றன. அது உற்சாகம் அளிப்பதாக உள்ளது.

அமெரிக்க முழுமையாக பொருளாதார வளங்களை மீட்டெடுக்கிற வரை நான்  ஓய மாட்டேன். நான் அதனை நம்புகிறேன். முன்பு இருந்ததை விட நமது பொருளாதாரத்தை அதிக அளவு உயர்த்தப்போகிறோம். நிறைய புத்திசாலிகள் அதற்கான வேலையை பார்க்கிறார்கள். பந்தயம் கூட கட்டுகிறார்கள். நீங்கள் பங்குச்சந்தையில் என்ன மாற்றம் நடக்கப்போகிறது என்பதை  பார்க்கத்தான் போகின்றிர்கள். என அதிபர் டிரம்ப்கூறியுள்ளார் .

அமெரிக்கா, கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் சிகிச்சைக்காகவும் , சோதனை வசதிகளை ஏற்படுத்தவும் , ரூ.52 ஆயிரத்து 500 கோடி  செலவு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |