செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒலிம்பியாட் செஸ் போட்டியில் எல்லாம் முழுக்க, முழுக்க குடும்ப ஆதிக்கம் தான் . வேற யாரும் கிடையாது. சுத்தி புத்தி பார்த்தீங்கன்னா, ஒரு சர்க்கஸ் கம்பெனி போல, அவங்க குடும்பம் தான் உட்கார்ந்து இருந்ததே ஒழிய, வேற என்ன ? உதயநிதிக்கு என்ன முக்கியத்துவம் கொடுத்தாங்க ? உதயநிதியின் புகழ் பாடுற அமைச்சர்கள் எல்லாம் இருக்கிறாங்க. தூங்கி எழுந்தாலே அவருக்கு கண்ணை உறுத்தும்.
இன்னைக்கு என்ன பண்ணுறது அண்ணா திமுகவை? என்ன பண்ணலாம்னு. அப்படி என்று கண்ணை உறுத்தி, அதிமுகவை எப்படி அழிக்கலாம் என்ற ஒரு யோசன. அதுல தான் சர்வாதிகார இருக்காரா ஒழிய, நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல அரசை அமைக்கணும், அப்படின்னு இல்லை.இந்த மாலையிலாவது உருப்படியாவது எந்த வேளையாவது செய்தால் நல்லது. ஆனா செய்வாங்களானா… நிச்சயமா செய்ய மாட்டாங்க. வெறும் 2 போட்டோசூட் நடக்கும். விளம்பர அரசியல் மட்டும் நடக்கும். இந்த ரெண்டும் கண்டிப்பா நடக்கும்.
நான் ரஜினி சாருக்காக வக்காலத்து வாங்கல. நான் பொதுவாக பேசுகிறேன். என்னை பொருத்தவரை பார்த்தீர்கள் என்றால்… அவரு கட்சியை பத்தி பேசி இருந்தால் சொல்ல முடியும் அவர பத்தி…. அவர் சொல்லவே இல்லையே. நான் அரசியல் பேசிட்டேன்ன… எதுவேனாலும் இருக்கலாம் ? நாட்டு நடப்பு, தமிழ்நாட்டு நடப்பு, இந்திய நடப்பு, எல்லாம் நடப்பையும், சமூகத்தை பற்றி பேசி இருக்கலாம். அது எனக்கு தெரியாது. நீங்க எங்கிட்ட இந்த கேள்வியை கேட்குறதை விட ரஜினி சார்கிட்ட நெக்ஸ்ட் டைம் பார்த்தாங்கன்னா அவர் கிட்ட இந்த கேள்வி கேளுங்க என தெரிவித்தார்.