ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க போவதில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் தற்போதைய அதிபரான ட்ரம்ப் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்திருப்பதாக கூறி தனது தோல்வியை ஏற்க மறுத்தார். இதனிடையே தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் அதிபராக ஜனவரி 20-ஆம் தேதி பதவி ஏற்க இருக்கிறார்.
இந்நிலையில் தற்போதைய ட்ரம்ப் “ஜோ பைடன் அதிபராக பதவி ஏற்கும் விழாவில் நான் பங்கேற்கப் போவதில்லை” என திட்டவட்டமாக கூறியுள்ளார். இதற்கு ஜோ பைடன் தரப்பிலிருந்து ட்ரம்ப் நல்ல முடிவை எடுத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.