Categories
மாநில செய்திகள்

திமுக நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றால் வாழ்த்துவேன்…. அமைச்சர் பேட்டி …!!

நீட் தேர்வுக்கு திமுக விலக்கு பெற்றால் வாழ்த்து கூறுவேன் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு நீட் செயல்படுத்தப்பட்ட 3 ஆண்டுகளாக தமிழகத்தில் மாணவிகள் தற்கொலை நீடித்து வருகின்றது.அனிதாவின் தொடங்கி கடந்த மாதம் இறந்த மோனிஷா வரை பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தமிழகத்தை ஆளும் அதிமுக நீட் தேர்வு மையத்தை அமைத்தாலும் நீட் வேண்டாம் என்றே சொல்லி வருகின்றது. மக்களவையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தால் நீட் இரத்து என்று சொல்லப்பட்ட நிலையில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

Image result for செங்கோட்டையன்

இதையடுத்து நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று தொடர்ந்து அதிமுக கூறி வருகின்றது. இந்நிலையில் ,  செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் , திமுக எம்பிக்கள் முயற்சி எடுத்து நீட் தேர்வுக்காக விலக்கு பெற்றால் வாழ்த்துகளை கூறுவேன்.  நீட் சட்டவடிவு கொண்டுவரும்போது ஆதரித்த திமுக, இன்று எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு பெற பிரதமரிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று தெரிவித்தார்.

Categories

Tech |