ஒரு போட்டியில் நாம் வெற்றி பெற போகிறோம் என்று நமக்கு தெரிகிறது. ஆனால் நம் பக்கத்தில் இருக்கும் ஒரு நபர் நம்மை வெற்றி பெற விடாமல் தடுக்கிறார் என்றால் நமக்கு எப்படி இருக்கும். 2011-இல் நடந்த IAAF 110 மீட்டருக்கான சாம்பியன்ஷிப் ஹடுல்ஸ் ரேஸ்சில் 8 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதில் சீனாவை சேர்ந்த லீயுசியானுக்கும் கியூபாவை சேர்ந்த டைரன் ரோபல்ஸ் ஆகிய இருவருக்கும் இடையில் தான் இந்த சம்பவம் நடக்கிறது. அதாவது போட்டியினுடைய தொடக்கத்தில் சீனாவை சேர்ந்த லீயுசியான் பின்தங்கியிருந்த நிலையில் இருந்தாலும் கடைசி நேரத்தில் முதன்மை வகித்து கொண்டிருந்தார். எல்லா ரசிகர்களும் லீயுசியான் தான் வெற்றி பெறுவார் என்று நினைத்திருந்த போது சில தடுமாற்றம் ஏற்படுகிறது. இதனால் லீயுசியான் மூன்றாவது இடத்தைத்தான் பிடித்துள்ளார். அதே நேரத்தில் லீயுசியான் ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார். அது என்னவென்றால் கியூபாவை சேர்ந்த டைரன் ரோபல்ஸ் என்பவர் லீயுசியானின் கையை தட்டி விட முயற்சி செய்துள்ளார். கடைசியாக மூன்றாவது முறை தட்டியும் விட்டுள்ளார். அதனால் தான் தன்னுடைய வேகம் குறைந்தது என்று லீயுசியான் குற்றச்சாட்டு வைக்கிறார். இதனால் அந்த ரேஸை பதிவு செய்த வீடியோவை replay செய்து பார்த்த போது உண்மை என்னவென்று தெரிகிறது. லீயுசியானின் கையை தட்டி விட்டுதான் டைரன் ரோபன் முன்னேறி செல்கிறார் என்பது தெரிய வருகிறது. இதனால் டைரன் ரோபல்ஸை disqualified செய்து லீயோசியானுக்கு சில்வர் மெடலும் அதற்கு முன்பாக சென்ற ஜெய்சன் ரிச்சர்ட்ஸ்-க்கு கோல்ட் மெடலும் வழங்கப்பட்டது.
Categories