Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பார்த்ததும் பதறிய கணவர்… 2 குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சினை காரணமாக இளம் பெண் தனது 2 குழந்தைகளுடன் விஷத்தை தின்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வில்லுபத்தரி பகுதியில் கட்டிடத் தொழிலாளியான பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு திருமலை செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு திவ்யா மற்றும் காவ்யா என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே பாண்டி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் திருமலை செல்வி இவ்வாறு வேலைக்கு செல்லாமல் இருந்தால் எப்படி குடும்பத்தை நடத்துவது என்று தனது கணவரிடம் கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் திருமலை செல்வி மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திருமலை செல்வி அப்பகுதியில் உள்ள அரளி விதைகளை பறித்து சென்று அரைத்து தனது 2 குழந்தைகளுடன் சாப்பிட்டு விட்டு மயங்கிக் கீழே விழுந்து கிடைத்துள்ளனர். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய பாண்டி தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாயில் நுரை வந்தபடி தரையில் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து மயங்கி கீழே கிடந்த இரண்டு குழந்தைகள் மற்றும் திருமலை செல்வியை தூக்கி முதலுதவி சிகிச்சை அளித்தபோது இரண்டு குழந்தைகளும் உயிர் பிழைத்துக் கொண்டனர்.

ஆனால் திருமலை செல்வி மட்டும் மயங்கிய படியே இருந்ததால் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு திருமலை செல்வியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று திருமலை செல்வியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |