ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து சித்தார்த், வைபவ் படங்களையும் இணையதளத்தில் வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா தயாரிப்பில், ஜோதிகா நடித்துள்ள படம்தான் பொன்மகள் வந்தாள். இப்படத்தை அப்படக்குழுவினர் தியேட்டர்களில் வெளியிடாமல் இணையதளத்தில் வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். இதற்க்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் தியேட்டர் அதிபர்கள் சூர்யாவின் “சூரரை போற்று”படம் உள்பட வேறு எந்த படமும் தியேட்டர்களில் இனி நாங்கள் வெளியிட மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் “பொன்மகள் வந்தாள்” படத்தை இணையதளத்தில் வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்களிடையே ஆதரவு பெருகிக்கொண்டே இருக்கிறது. இது மட்டுமின்றி மேலும் 5 படங்கள் இணையதளத்தில் வெளியிட இருக்கிறோம் என்றும் அறிவித்துள்ளார்கள். திரிஷாவின் பரமபதம் விளையாட்டு, சந்தானத்தின் சர்வர் சுந்தரம் ஆகிய படங்களும் வெளியிடுவதற்கு முடிவு செய்திருக்கின்றனர்.