தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல பொறுப்புகளில் இருந்த அதிகாரிகள் வேறு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். ஏற்கனவே 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 13 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி டிஎன்பிஎஸ்சி செயலாளராக இருந்த நந்தகுமார் பள்ளிக் கல்வித் துறை ஆணையராகவும், தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனராகவும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக குமரகுருபரன், நுகர்பொருள் மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை ஆணையராக ஆனந்த குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.