தமிழகத்துக்கு அதிக மழை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை பணியை மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடத்தியதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய காரணத்தினால் அனைத்து மாவட்டத்திற்கும் இந்த அதிகாரிகள் நேரடியாக சென்று அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைவருடன் ஆலோசனை நடத்தி முன்னெச்சரிக்கை , பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் உத்தரவுவிட்டுள்ளார். அதிக மழை மற்றும் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகள் என்று அடையாளம் கண்ட பகுதியில் தேவையான பணிகளை மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.