Categories
மாநில செய்திகள்

IAS,IPS பயிற்சி வகுப்பிற்கான நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு… திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக  மாநிலம் முழுவதும் ஜனவரி 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காரணமாக ஆர்வலர்களின் நலன்கருதி வருகின்ற ஜனவரி  23 ஆம் தேதி நடைபெற இருந்த முதல்நிலைத் தேர்வு பயிற்சி வகுப்பிற்கான நுழைவுத் தேர்வானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், அவ்வப்போது அறிவிக்கப்படும் விவரங்களை அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com மற்றும் தொலைபேசி 044-24621475 வாயிலாக அறிந்துகொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |