ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதுக்கு தமிழக வீரர் நடராஜன் பெயர் இடம் பெற்றுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் தொடரை முக்கிய வீரர்கள் இல்லாமல் அறிமுக வீரர்கள் மட்டும் வென்று வரலாறு வரலாற்று சாதனை படைத்தனர். இதையடுத்து புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான ஐசிசி வீரர்கள் விருதுக்கு ஆஸ்பிரின் ரிஷப் பந்த், நடராஜன், சிராஜ் ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
ரசிகர்கள் ஒவ்வொரு மாதமும் ஆன்லைனில் தங்களுக்கு பிடித்த விருப்பமான வீரர்களுக்கு ஓட்டு போட வேண்டும். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலிருந்து ஐசிசியில் பதிவு செய்யப்பட்ட ரசிகர்கள் ஐசிசி இணையதளம் வழியாக தங்களுடைய ஓட்டுகளை பதிவு செய்வார்கள். இதையடுத்து வெற்றி பெற்ற வீரர்கள் பெயர் ஒவ்வொரு மாதமும் ஐசிசி டிஜிட்டல் சேனல் மூலம் அறிவிக்கப்படும். இதில் தற்போது நடராஜன் இடம்பெற்றுள்ளார் என்பதால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.