டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது .
ஐசிசி சார்பில் ஒருநாள் தொடர் ,டி20 போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்கள் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றது. இதில் குறிப்பாக ஐசிசி நடத்திய 8 கோப்பைகளை ஆஸ்திரேலியா அணி வென்று அபார சாதனை படைத்துள்ளது. இதில் 1987, 1999, 2003, 2007, 2015 என ஐந்து முறை ஒருநாள் தொடருக்கான உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து 2006 மற்றும் 2009ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கோப்பையையும் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.இதனிடையே நேற்றைய போட்டியின் மூலம் இந்த ஆண்டுக்கான டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.