Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி மகளிர் கிரிக்கெட் : பேட்டிங் தரவரிசையில் ….. 3-வது இடத்தில் நீடிக்கிறார் மிதாலி ராஜ்…..!!!

மகளிர்  ஒருநாள் கிரிக்கெட் தொடரின் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 3-வது இடத்தில் நீடிக்கிறார் .

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான புதிய வீராங்கனையின் தரவரிசை பட்டியலை ஐசிசி  வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்  738 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் நீடிக்கிறார் .இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி வீராங்கனை லிசல் லீ 761 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய வீராங்கனைஅலிசா ஹீலே 750 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

இதையடுத்து சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில்  டெஸ்ட் ,ஒருநாள் மற்றும் டி20 என ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் எடுத்த இந்தியர்கள் பட்டியலில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |