ஐசிசி மகளிர் உலகக் கோப்பைக்கான தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது .
ஐசிசி 2022 மகளிர் உலக கோப்பை போட்டி வருகின்ற மார்ச் 4-ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியின் கேப்டனாக மிதாலி ராஜ் மற்றும் துணை கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி மோதுகின்றது. இந்த தொடரிலும் மிதாலிராஜ் தலைமையிலான அணியே விளையாடும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பைக்கான இந்திய அணி : மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்ப்ரீத் கவுர் (துணை கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா சிங் தாக்கூர் தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராஜேஸ்வரி கயக்வாட், பூனம் யாதவ்
காத்திருப்பு வீரர்கள்: சப்பினேனி மேகனா, ஏக்தா பிஷ்ட், சிம்ரன் தில் பகதூர்