Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ICC Ranking : டி20 கிரிக்கெட்டில்….. முன்னேறிய இந்திய வீராங்கனை மந்தனா…. எந்த இடம் தெரியுமா?

இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஐசிசி டி20 ஐ பேட்டர்களுக்கான தரவரிசையில் நம்பர் 2 இடத்தைப் பிடித்தார்.

மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் முன்னேறிய மந்தனா :

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று சர்வதேச பெண்கள் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டது. இதில் டி20 ஐ பேட்டர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி 743 புள்ளிகளுடன் முன்னணியில் (முதலிடம்) உள்ளார். அதே நேரத்தில் மந்தனா 731 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், ஆஸி வீராங்கனை மெக் லானிங் 725 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிராக நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் போது மந்தனா 111 ரன்கள் எடுத்தார், இதனால் 26 வயதான மந்தனா இரண்டு இடங்கள் உயர்ந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்து சோபி டிவைன் (715) 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்தியாவின் இளம் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 666 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளார்.

மகளிர் ஒருநாள் போட்டி பேட்டிங்கில் முன்னேற்றம் : 

அதேபோல இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஹோவில் நடந்தது. இந்த போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதில் இடது கை ஆட்டக்காரர் மந்தனா 91 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிக்கான பேட்டர்களுக்கான பட்டியலில் 3 இடங்கள் முன்னேறி 7ஆவது இடத்தை பிடித்தார்..

மேலும் மந்தனா மட்டுமின்றி இந்திய அணி வீரர்களும் பெரிய முன்னேற்றம் அடைந்தனர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 4 இடங்கள் முன்னேறி 9ஆவது இடத்திலும், யாஸ்திகா பாட்டியா 8 இடங்கள் முன்னேறி 37வது இடத்திற்கு முன்னேறினார்.. அந்தப் போட்டியில் யாஸ்திகாவும் அரை சதம் (50) விளாசினார். அதேசமயம் ஒருநாள் போட்டி பேட்டர்ஸ் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்..

மகளிர் ஒருநாள் போட்டி பவுலிங்கில் முன்னேற்றம் :

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கேட் கிராஸ் அதே ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஒட்டுமொத்தமாக 3 இடங்கள் முன்னேறி 10வது இடத்திற்கு முன்னேறினார். அதே நேரத்தில் சக இங்கிலாந்து வீராங்கனை சார்லோட் டீன் 4 இடங்கள் முன்னேறி 20வது இடத்திற்கு முன்னேறினார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா அதே ஆட்டத்தின் போது தனது சொந்த 2 விக்கெட்டுகளை எடுத்ததன் விளைவாக ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி 12வது இடத்திற்கு முன்னேறினார்.

 

Categories

Tech |