Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி சிறந்த வீரருக்கான விருது …. இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் வென்றார் ….!!!

ஐசிசி -யின் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்  தட்டி சென்றார்.

ஐசிசி மாதந்தோறும் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது .அதன்படி ஆடவர் கிரிக்கெட்டில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .இவருடன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் பாகிஸ்தான் அணியின்  ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் போட்டியில் இருந்தனர் .ஆனால் ஜோ ரூட் இருவரையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார் .

இதையடுத்து மகளிருக்கான கிரிக்கெட் அயர்லாந்து அணியின்  ஆல்ரவுண்டரான எய்மியர் ரிச்சார்ட்சன் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .சமீபத்தில் நடந்த இங்கிலாந்து- இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் இந்திய அணிக்கு எதிராக மூன்று சதங்களுடன் 507 ரன்கள் அடித்து விளாசினார் .அதோடு ஐசிசி தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |