Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டி 20 க்கான உலககோப்பை போட்டி…இந்தியாவில் நடக்குமா ..? ஐசிசி சொன்ன பதில் …!!!

அக்டோபர்- நவம்பர் மாதங்களில், டி20 க்கான உலககோப்பை போட்டியானது, இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய கொரோனா  வைரஸின்  தாக்கம் நாடு முழுவதும் பரவியது. இந்த கொரோனா  வைரஸ் தொற்றானது, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கி, அக்டோபர் மாதத்தில் தொற்றின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு படிப்படியாக ,கொரோனா வைரஸ் தொற்று குறைந்துகொண்டே வந்தது. ஆனால் தற்போது மீண்டும் ,கொரோனா தொற்றானது  வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. தற்போது  கொரோனா தொற்றின்  2ம் அலை , இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த  இக்கட்டான  சூழலிலும் ,ஐபிஎல் போட்டிகள் நாளை முதல்  தொடங்க  உள்ளது. தற்போது உலகக் கோப்பைக்கான டி20 தொடரானது இந்தியாவில் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில் கொரோனா தொற்று  அதிகரித்து ,வருவதே  காரணமாக கருதப்படுகிறது. இதுபற்றி ஐசிசி-யின் இடைக்கால சி.இ.ஓ  அல்லார்டைஸ் கூறும்போது, உலக கோப்பை டி20 போட்டியானது திட்டமிட்ட படி நிச்சயம் செய்வோம். இந்தப் போட்டிக்கான மாற்று திட்டமும் எங்களிடம் உள்ளது என்றும் ,அதை பற்றி இன்னும் யோசிக்கவில்லை என்று கூறினார். இதுபற்றி பிசிசிஐ -யுடன் கலந்து ஆலோசித்து வருவதாகவும் ,விரைவில் மாற்று திட்டத்தை செயல்படுத்தப் போவதாகவும், அவர் கூறினார். கொரோனா பெருந்தோற்று  காலத்தில் கூட, மற்ற  நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று உள்ளது. அதை நாங்கள் நினைவில் வைத்து ,கற்றுக் கொண்டு வருவதாகவும் கூறினார் . இதைத்தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்கான , இறுதிப்போட்டி இரண்டு மாதங்களில் தொடங்க உள்ள நிலையில் ,அதிலும் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Categories

Tech |