டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் 50 இடங்கள் முன்னேறி 44 வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
இந்திய அணி சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டி20 தொடரை கைப்பற்றியது. இதில் டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று அசத்தியது இந்திய அணி.
இந்த டி20 கிரிக்கெட் தொடரில் பல இளம் வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடியதால் அவர்களின் செயல்பாடு எப்படி இருக்க போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இளம் பட்டாளங்களைக் கொண்டு இந்திய அணி 4 -1 என்ற கணக்கில் வென்று காட்டியது.
இந்த தொடர் முடியவும் ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசையை வெளியிட்டது. அதில், இந்திய வீரர்கள் பலரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அதில் ஏற்கனவே முன்னேற்றம் கண்டு 2ஆவது இடத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் அதே இடத்தில் நீடிக்கின்றார்.. அதுமட்டுமில்லாமல் முதல் 10 இடங்களில் இருக்கும் ஒரே இந்திய வீரராக சூர்யகுமார் யாதவ் திகழ்கிறார்.
அதேபோல மற்றொரு வீரரான ஷ்ரேயஸ் ஐயர் 6 இடங்கள் முன்னேறி டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 19 ஆம் இடத்தில் இருக்கிறார். மேலும் ரிஷப் பண்ட் சில இடங்கள் முன்னேற்றம் அடைந்து 59 வது இடத்தை பிடித்துள்ளார். இவர்களைத் தவிர டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் 50 இடங்கள் முன்னேறி 44 வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
இந்தத் தொடரில் பலவீரர்களும் முன்னேற்றம் கண்ட நிலையில், ரவி பிஷ்னாய் மட்டும் பெரிய அளவில் முன்னேறி 50 இடங்கள் முன்னேறி அசத்தியிருக்கிறார். எனவே வரும் டி20 தொடர்களில் அவர் நிச்சயமாக இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ரவி பிஷ்னாய் கடைசி டி20 தொடரில் 2.4 ஓவர் வீசி 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 6.00 எக்கனாமியில் 4 வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.