சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தை பிடித்துள்ளார் .இதையடுத்து இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.
இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5-வது இடத்திலும் ,கே.எல்.ராகுல் 8-வது இடத்திலும் உள்ளனர்.அதேபோல் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இலங்கை வீரர் ஹசரங்கா முதல் இடத்திலும் , தென்ஆப்பிரிக்கா வீரர் ஷம்சி 2-வது வேடத்திலும் , இங்கிலாந்து வீரர் அடில் ரஷித் 3-வது இடத்திலும் உள்ளனர்.