Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டி20 தரவரிசை : தொடர் வெற்றியின் எதிரொலி ….6 ஆண்டுகளுக்கு பிறகு …. முதலிடம் பிடித்தது இந்தியா ….!!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3- வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.இந்த நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள டி20 கிரிக்கெட் தொடருக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
தொடர் வெற்றியின் மூலமாக 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.இதற்கு முன்பாக கடந்த 2016-ம் ஆண்டு  பிப்ரவரி 12 முதல் மே 3 வரை எம்.எஸ்.டோனி தலைமையிலான இந்திய அணி  முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |