Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டி20 தரவரிசை : ‘டாப் 10’-ல் இந்திய பவுலர்களுக்கு இடமில்லை …..!!!

ஐசிசி-யின் டி 20 கிரிக்கெட்டின் புதிய  தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  வெளியிட்டுள்ளது .

ஐசிசி டி 20 தொடருக்கான  புதிய தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது .இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும் ,இங்கிலாந்து அணியில் டேவிட் மலான் இரண்டாவது இடத்திலும் , தென்னாபிரிக்க அணியில் மார்க்ராம் மூன்றாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றன. இதையடுத்து நியூசிலாந்து அணியில் டேவான் கான்வே 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அடுத்ததாக பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்திய அணியில் கே.எல்.ராகுல் 5-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு சரிந்து உள்ளார் .

அதேபோல் விராட்கோலி 8வது இடத்திலும் ,ரோகித் சர்மா 17-வது இடத்திலும் உள்ளன. அடுத்ததாக நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 33-வது இடத்திலும்,  மிட்செல் மார்ஷ்  13-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதையடுத்து பந்துவீச்சாளர்  தரவரிசை பட்டியலில் இலங்கை அணியின் ஹசரங்கா முதலிடத்திலும் , தென்ஆப்பிரிக்கா வீரர் தப்ரைஸ் ஷம்சி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அடுத்ததாக உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 13 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆனால் ‘டாப் 10’ பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் இந்திய பவுலர்கள் யாரும் இடம்பெறவில்லை.

Categories

Tech |