ஐசிசி தரவரிசை பட்டியலில்,சிறந்த பந்துவீச்சாளராக புவனேஷ்வர் குமார் 11 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ,மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் ,தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய, இறுதிப்போட்டியில் 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றி அடைய செய்தார். இவ்வாறு நடைபெற்ற மூன்று போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
இதற்கு முந்தைய ஆட்டத்தில் காயம் ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்து ,முதல் ஆட்டத்திலேயே தன்னுடைய சிறப்பை காட்டினார். இதன் காரணமாக ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான போட்டியின் ,தரவரிசை பட்டியலில் 9 இடங்களுக்கு முன்னேறி ,11வது இடத்தை பெற்றுள்ளார். இதுபோலவே இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ,இந்தியாவுக்கு எதிரான 2வது தொடரில் 99 ரன்களை எடுத்து தரவரிசை பட்டியலில் 24 வது இடத்தை பெற்றுள்ளார். அதுபோல பேர்ஸ்டோவ் 7வது இடத்தை பெற்றுள்ளார்.