Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி தரவரிசை பட்டியலில்…..புதிய சாதனை படைத்த மெஹிதி ஹசன்…!!!

ஐசிசி-யின் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் வங்காளதேச சுழற்பந்து வீச்சாளரான மெஹிதி ஹசன் 2 வது இடத்தைப் பெற்றுள்ளார்.

இலங்கை- வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.  வங்காளதேச  சுழற்பந்து வீச்சாளரான மெஹிதி ஹசன் முதல் போட்டியில் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2 வது இன்னிங்சில் 28 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய மெஹிதி ஹசன் , ஐசிசி-யின் பந்துவீச்சாளர்களுக்கான ஒருநாள் போட்டியின்    தரவரிசை பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்து ,2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேறிய, 3வது வங்கதேச வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பாக 2009 ம் ஆண்டு சாஹிப் அல் ஹசன் முதல் இடத்தையும் ,  2010ம் ஆண்டு அப்துர் ரசாக் 2-வது இடத்தையும் பிடித்திருந்தனர்.  பேட்டிங்கில் அதிரடி காட்டிய முஷ்பிகுர் ரஹ்மான் முதல் இன்னிங்சில் 84 ரன்கள், 2-வது இன்னிங்சில் 125 ரன்களை அடித்து விளாசி  14-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Categories

Tech |