டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் .
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 5 இடங்களில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் , நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் மற்றும் ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன் , இந்தியாவின் விராட் கோலி , இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் எந்த ஒரு மாற்றமின்றி தொடர்கின்றனர். இதையடுத்து பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்சும் , 2 வது இடத்தில் இந்தியாவின் அஸ்வின் மற்றும் 3-வது இடத்தில் நியூசிலாந்தின் டிம் சவுதி ஆகியோர் நீடிக்கிறார்கள். இதில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான காஜிசோ ரபடா 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் .
இதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டுகானா ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸில் ஜான்சன் ஹோல்டர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சோபிக்க தவறியதால் , 384 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு சரிந்து உள்ளார். இதனால் ஆல்ரவுண்டர் வரிசையில் 2 வது இடத்தில் இருந்த, இந்திய வீரர் ஜடேஜா 386 புள்ளிகளுடன் மீண்டும் முதல் இடத்தை கைப்பற்றினார். இவர் இறுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக வலம் வந்தார். அடுத்ததாக இங்கிலாந்த்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 377 புள்ளிகளை பெற்று 3-வது இடத்திலும், இந்தியாவின் அஸ்வின் 353 புள்ளிகளை பெற்று 4-வது இடத்திலும் உள்ளனர்.