Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : அஸ்வின் அசத்தல் முன்னேற்றம் …. ஜடேஜா சறுக்கல் ….!!!

ஐசிசி டெஸ்ட்  தொடருக்கான ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலில்  இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல் இங்கிலாந்து அணி  கேப்டன் ஜோ ரூட் 903 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ,ஆஸ்திரேலிய வீரர்  ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 879 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

இதையடுத்து  இந்திய அணியில் ரோகித் சர்மா 797 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார். இதைத்தொடர்ந்து பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியல் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ,இந்திய அணியின்  சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 883   புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட்  816 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் , நியூசிலாந்து வீரர் டிம் சவுதி 814 புள்ளியுடன் 4-வது இடத்திலும் பாகிஸ்தான் அணியில் ஷஹீன் அப்ரிடி 810 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். இதைத் தொடர்ந்து ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர் அஸ்வின் 360 புள்ளிகளுடன் 2-வது  இடத்துக்கு முன்னேறியுள்ளார்.  இதில்  346 புள்ளிகளுடன் ஜடேஜா 4-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.

Categories

Tech |