ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறினார் .
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் 901 புள்ளிகளை எடுத்து மீண்டும் முதல் இடத்தை கைப்பற்றினார் .
இதையடுத்து 2 வது இடத்தில் 891 புள்ளிகளுடன் ஸ்மித் ஸ்மித் உள்ளார். அடுத்ததாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 812 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் ,ரோகித் சர்மா 789 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளார். இதையடுத்து 6-வது இடத்தில் இருந்த ரிஷப் பண்ட் ஒரு இடம் பின்தங்கி 752 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார் .
🇳🇿 @BLACKCAPS captain Kane Williamson is back to the No.1 spot in the latest @MRFWorldwide ICC Men's Test Player Rankings for batting.
Full list: https://t.co/OMjjVx5Mgf pic.twitter.com/1DWGBonmF2
— ICC (@ICC) June 30, 2021