ஐசிசி டெஸ்ட்கிரிக்கெட் தொடருக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.மும்பையில் நடந்த இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .
அதோடு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது .இந்த வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 124 புள்ளிகளைப் பெற்று இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது இதில் நியூசிலாந்து அணி 121 புள்ளிகளைப் பெற்று 2-வது இடத்திலும், 108 புள்ளிகளை பெற்று ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்திலும் உள்ளது.
🔝
India are back to the No.1 spot in the @MRFWorldwide ICC Men’s Test Team Rankings.#INDvNZ pic.twitter.com/TjI5W7eWmq
— ICC (@ICC) December 6, 2021