Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி தொடர் : இந்தியாவில் 2 உலகக் கோப்பை உட்பட மூன்று போட்டி …. ஐசிசி அதிகார்வப்பூர்வ அறிவிப்பு ….!!!

பாகிஸ்தானில் 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறும்  என ஐசிசி அறிவித்துள்ளது.

ஐசிசி போட்டிகள் நடைபெறும் நாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் 2 உலகக் கோப்பை உட்பட மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பாகிஸ்தானில் வருகின்ற 2025 -ஆம் ஆண்டில் சாம்பியன் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இதையடுத்து 2024 – ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டி  ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸில்  நடைபெறுகிறது . அதேபோல் 2026 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியா மற்றும் இலங்கையிலும், 2027 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வேயிலும் நடைபெறுகிறது .

அடுத்ததாக 2028-ஆம் ஆண்டுக்கான  டி20 உலக கோப்பை போட்டி  ஆஸ்திரேலியா, நியூசிலாந்திலும்,2029-ஆம் ஆண்டு  சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்தியாவிலும் நடைபெறுகிறது.இதையடுத்து 2030-ம் ஆண்டு  டி20 உலக கோப்பை போட்டி இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்தில் நடைபெறுகிறது .அடுத்து 2031-ஆம் அண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியா, வங்களதேசம் அதனிடையே பாகிஸ்தானில் சுமார் 25 வருடங்களுக்கு பிறகு  ஐசிசி தொடர் நடைபெற உள்ளதுஎன்பது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |