Categories
கிரிக்கெட் விளையாட்டு

ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : 2-வது இடத்திற்கு  முன்னேறியது பாகிஸ்தான் ….!!!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி 2-வது இடத்திற்கு  முன்னேறியுள்ளது .

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.இதில் இரு அணிகள் இடையே நடந்த டி20 போட்டியில்       3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை வென்றது  .இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0  என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது .

இதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் 75% புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி இரண்டாவது  இடத்துக்கு முன்னேறியுள்ளது .இதில் இலங்கை அணி 100% புள்ளிகளுடன் முதலிடத்திலும் ,இந்திய அணி  58.33 % புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.

Categories

Tech |