Categories
கிரிக்கெட் விளையாட்டு

ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : புள்ளி பட்டியலில் இந்திய அணி சறுக்கல் ….!!!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி 5-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

2022-2023 வரையிலான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ள இலங்கை அணி இரண்டிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது .இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3-ல் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 83.33 சதவீதத்துடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இதில் 75 சதவீதத்துடன் பாகிஸ்தான் அணியின் 3-வது இடத்திலும் உள்ளது.

இதையடுத்து இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா ஒரு போட்டியிலும் , தென்னாப்பிரிக்கா 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால்  தென்னாப்பிரிக்கா அணி 66.66 சதவீதத்துடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது .இதில் கடைசி போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி 5-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது.

Categories

Tech |