உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக இந்திய அணி கடந்த 2 ம் தேதி இந்தியாவிலிருந்து, இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றது. இங்கிலாந்திற்கு சென்றடைந்ததும் வீரர்கள் அனைவரும் சவுத்தாம்ப்டன் உள்ள ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன. இந்த தனிமைப்படுத்துதலில் ஒருவரை ஒருவர் சந்திக்க கூடாது ,வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொள்ள கூடாது மற்றும் மூன்று நாட்கள் ஹோட்டல் அறையை விட்டு வெளியே வரக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
குறிப்பிட்ட நாள் முடிந்தபின் வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பயிற்சியை மேற்கொள்ளலாம். இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜா சவுத்தாம்ப்டன் மைதானத்தில் தனியாகப் பந்து வீசி பயிற்சி மேற்கொண்டார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். வீரர்கள் ஜிம்மில் பயிற்சி மேற்கொள்ள, பீல்டிங் பயிற்சி எடுக்க வெவ்வேறு நேரத்தில், அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் ஒரு நேரத்தில் இணைந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபட கூடாது. இன்றுடன் ரூம் அறையில் வீரர்களுக்கு தனிமைப்படுத்துதல் முடிவடைந்து விட்டதால், குறைந்த அளவிலான வீரர்கள் ஒன்றாக இணைந்து , ஜிம்மில் பயிற்சி மேற்கொள்ளலாம் .
First outing in southampton🙌 #feelthevibe #india pic.twitter.com/P2TgZji0o8
— Ravindrasinh jadeja (@imjadeja) June 6, 2021