Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி விருது 2021: சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது ….! பட்டியலில் அஸ்வின்இடம்பிடிப்பு ….!!!

2021-ஆம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது .

ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஐசிசி டெஸ்ட் ,ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களைத் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது .அதன்படி இந்த ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்,இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன் மற்றும் இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணரத்னே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இந்த ஆண்டு 8 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார் .அதோடு ஒரு சதம் உட்பட 337 ரன்கள் எடுத்துள்ளார் .இதையடுத்து நியூசிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 15  டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதம் உட்பட 1708 ரன்கள் குவித்துள்ளார். இதையடுத்து இந்த ஆண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கைல் ஜேமிசன்  27 விக்கெட் கைப்பற்றி உள்ளார் .அதைப்போல் இங்கிலாந்து அணியின் கேப்டன்   திமுத் கருணரத்னே 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 சதம் உட்பட 902 ரன்கள் குவித்துள்ளார்.

Categories

Tech |