Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி… முதலில் தகுதி பெற்றுள்ள நியூசிலாந்து…!

இங்கிலாந்தில் நடைபெற விருக்கும் உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின் தென்ஆப்பிரிக்காவிற்கான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்பான சுற்றுப்பயணம் வரும் செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கொரோனா பரவல் அதிகமாக நிலவும் காரணத்தால் சுற்றுப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால், வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நியூஸிலாந்து விளையாடுவது உறுதியானது. மேலும் ஐசிசி உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நுழைய அதிக வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |